November 14, 2010

November 7, 2009

ஓ ஆத்மாவே! -கலீல் ஜிப்ரான்-

ஓ ஆத்மாவே! நான் என்றும் அழியாமல் இருக்கும் "நிலைத்த தன்மை"க்குப் பேராசைப்படாமல் இருந்தால் நான் காலமெல்லாம் பாடப்படும் கவிதைகளைக் கற்றிருக்கவே மாட்டேன்.

அதைவிட நான் என்னையே தற்கொலை செய்து கொண்டிருப்பேன். அப்போது என் சாம்பல் மட்டும்தான் என் சமாதியிலே புதையுண்டு இருக்கும். மீதி ஏதும்
என்னில் மிஞ்சி இருக்காது.

ஓ ஆத்மாவே! நான் கண்ணீருடன் ஞானஸ்நானம் செய்யப்படாமல் இருந்திருந்தால், நோய் எனும் பிசாசு என் கண்களை மூடி மறைக்காமல் இருந்திருந்தால், நான் வாழ்க்கையைக் கருமையாக பார்த்திருப்பேன், திரை வழியே காண்பது போல்.

ஓ ஆத்மாவே! வாழ்க்கையே ஒரு இருள்தான். காலையில் சூரியன் உதிக்கும்போது அது மறைகிறது.

ஏங்கும் என் இதயம் கூறுகிறது, "சவக் குழியிலே சமாதியிலே தான் அமைதி நிலவும்" என்று.

ஓ ஆத்மாவே! உடம்பு அழிந்து விடுவது போலவே ஆத்மாவும் அழிகின்றது, சாவது மறுபடியும் உயிர் பெறுவதில்லை; என்று சொல்வானானால் அவனிடம் கூறுங்கள்,

"மலர்கள் வாடி உலர்ந்து அழிகின்றன. ஆனால் விதைகள் வாழ்ந்து நம் முன்னே வாழ்க்கையின் இரகசியத்தை என்றும் அழியாமல் வாழ்விக்கின்றது என்று எடுத்துக் காட்டுகிறதே."

தமிழில்: ஆ. மா. சகதீசன்
நூல்: கலீல் ஜிப்ரான்: ஆத்மதரிசனம்